2021-ம் ஆண்டு அறிமுகம் ஆன சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

2021-ம் ஆண்டு விரைவில் முடிய உள்ள நிலையில், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எவை? அவற்றின் சிறப்பம்சங்கள் என்னென்ன என இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

ஓலா எலக்ட்ரிக் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரண்டு வேரியண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

ஓலா எலக்ட்ரிக் எஸ்1 விலை 99,999 ரூபாய். ஓலா எலக்ட்ரிக் எஸ்1 ப்ரோ விலை 1,21,999 ரூபாய்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 181 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்.

ஓலா ஹைப்பர் சார்ஜ் நெட்வொர்க் மூலம் 18 நிமிடத்தில் 50% வரை பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். 2.9kWh பேட்டரியை முழுவதும் சார்ஜ் செய்ய 6 மணி நேரம் வரை தேவைப்படும்.

சிம்பிள் ஒன் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.8kWh பேட்டரி உள்ளது.

சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 236 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். 

சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் விலை 1.09 லட்சம் ரூபாய் என சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் ஒரு முறை சார்ஜ் செய்தால் 116 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்.

ரூ.1.32 லட்சம். அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் வரை போகும். 2.61kWh பேட்டரி இந்த ஸ்கூட்டரில் உள்ளது. 80% சார்ஜ் ஆக 3 மணி நேரம் 35 நிமிடங்கள் தேவை.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் பஜாஜ் ப்ரீமியம் 1.32 லட்சம் ரூபாய். அர்பன் வேரியண்ட் 1.44 லட்சம் ரூபாய்.

2.9 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 95 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.

டிவிஎஸ் ஐ-க்யூப் டிவிஎஸ் ஐ-க்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்.

1.4 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 80% சார்ஜ் ஆக 5 மணி நேரம் வரை தேவைப்படும். அதிகபட்சம் 78 கிலோ இட்டர் வேகத்தில் போகும்.