வங்கிகள்  15  நாட்களில் அளித்த  மொத்த  கடன்  எவ்வளவு தெரியுமா?

இந்திய வங்கிகள் 2021, அக்டோபர் 16-ம் தேதி ம்னுதல் 31-ம் தேதி வரையில் 65,579 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன.

வியாபாரக் கடன்  - ரூ.21,687 கோடி

விவசாயக் கடன்  - ரூ.16,734 கோடி

வீட்டுக் கடன்  - ரூ.8,994 கோடி

தனிநபர் கடன்  - ரூ.7,122 கோடி

வாகனக் கடன்  - ரூ. 4,562 கோடி

பிற கடன்கள்  - ரூ.4,480 கோடி

மொத்தம் 13.84 லட்சம் நபர்கள் கடன் பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கி 14,461 கோடி ரூபாக்கு கடன் வழங்கியுள்ளது. 3,20,000 நபர்கள் கடன் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து எச்.டி.எப்.சி வங்கி 8,421 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது. 51,806 நபர்கள் கடன் பெற்றுள்ளனர்.

பாங்க் ஆப் பரோடா 5,555 கோடி ருபாய் கடன் வழங்கியுள்ளது. 1,20,000 நபர்கள் கடன் பெற்றுள்ளனர்.

இந்த தகவல்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.