வென்பா செம்ம தில்லுதான்!!!

பாரதி கண்ணம்மா சீரியலில் வென்பா என்ற வில்லி கேரக்ட்டரில் நடிப்பவர் நடிகை ஃபரினா.

கர்ப்பமாக இருக்கும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதற்கான ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்.

அது இணையதளத்தில் வைரல் ஆன நிலையில் இப்போது துணிச்சலாக இன்னொரு செயல் செய்துள்ளார் ஃபரினா.

ஆம், நீருக்கடியில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள பிரபல ரமடா இண்டர்நேஷ்னல் தங்கும் விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில், கர்பமாக உள்ள ஃபரினா போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

ஃபரினாவின் இந்த புகைப்படங்கள் இப்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஃபரினா கர்ப்பமாக உள்ளதால், பாரதி கண்ணம்மா சீரியலில் இவரது காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன.

பிரசவத்துக்கு பிறகும் தான் பாரதி கண்ணமா சீரியலில் தொடருவேன் என ஃபரினா அண்மையில் தெரிவித்து இருந்தார்.

இதே போன்று நடிகை சமீரா ரெட்டியும் பிரசவத்துக்கு முன்பு நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்தில் அந்த படங்களும் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.