சியோமி நிறுவனம் தனது மற்றோரு பிராண்டான ரெட்மி கீழ், புதிதாக ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ரெட்மி ஸ்மார்ட்போன் 6.5 இஞ்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. 

டிஸ்பிளே பெரியது என்பதால் கேம் விளையாட அருமையாக இருக்கும்.

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி/128 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.

கூடுதல் மெமரி தேவைப்பட்டால், மெமரி கார்டு பயன்படுத்த ஒரு ஸ்லாட்டும் வழங்கப்பட்டுள்ளது.

50 மிபி பிரைமரி கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் + 2 எம்பி மேக்ரோ சென்சார் என 4 கேமராக்கள் ரெட்மி 10 பிரைமில் உள்ளன.

இரவு நேரங்களில் கூட இந்த கேமராக்கள் மூலம் எளிதாகப் படம் பிடிக்கலாம்.

செல்பி எடுக்க 8 எம்பி கேமரா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி 10 பிரைமில் ஆக்டோ - கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 88 சிப்செட் இடம்பெற்றுள்ளது.

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், எஃப்.எம் ரேடியோ, சி-டைப் யுஎஸ்பி, 3.55 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் உள்ளன.

6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி ரெட்மி 10 பிரைம் போன் ரூ.12,499-க்கு விற்பனையாகி வருகிறது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் போன் ரூ.14,499-க்கு விற்பனையாகி வருகிறது.