சினிமா செய்திகள்

சம்யுக்தா போன்றவர்கள்தான் தேவை- தயாரிப்பாளர் புகழாரம்!

Published

on

‘வாத்தி’ படப்புகழ் சம்யுக்தா பற்றி தயாரிப்பாளர் புகழ்ந்து பேசியுள்ளார்.

‘வாத்தி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா. படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் கூறியிருப்பதாவது, “‘எடக்காடு பட்டாலியன்’ என்ற படத்தைத் தயாரித்து இருந்தேன். இதில் சம்யுக்தா நடித்திருந்தார். இதற்காக முதலில் அவரிடம் பேசிய சம்பளத்தில் இருந்து 65 சதவீதம் மட்டுமே கொடுத்திருந்தேன்.

பின்பு படம் வெளியாகி பெரித வரவேற்பைப் பெறவில்லை. இதற்கடுத்து, அவரின் மீதி ஊதியத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்து விட்டார் சம்யுக்தா.

இந்நாட்களில் சம்பள பாக்கி வரவில்லை என்றால் டப்பிங் தராமல் இருப்பது, பட புரோமொஷன்களுக்கு வராமல் இருப்பது போன்றவை நடக்கிறது. ஆனால், இதற்கு மத்தியில் சம்யுக்தா போன்ற நடிகர்களைக் காண்பது அரிது.

சம்யுக்தா மற்ற நடிகர்களுக்குப் பாடப்புத்தகம் போன்றவர். வருடத்தில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கும் மேல் தயாராகும் மலையாள சினிமாவில் வெறும் ஐந்து சதவீத படங்கள் மட்டுமே வெற்றி அடைகின்றன. அப்படி இருக்கும்போது சம்யுக்தா போன்றவர்கள் தயாரிப்பாளர்களுத் தேவை” எனப் பாராட்டியுள்ளார்.

Trending

Exit mobile version