கிரிக்கெட்

தோனி பாணியில் ஹெலிகாப்டர் ஷாட்.. விராத் கோஹ்லியின் வீடியோ வைரல்

Published

on

தோனியை தனது மானசீக குருவாக ஏற்று விளையாடி வரும் விராத் கோலி நேற்றைய போட்டியில் தோனி பாணியில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நேற்று இந்தியா மற்றும் இலங்கை அணி களுக்கிடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்தியா நேற்று 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றி இலங்கையை வாஷ் அவுட் செய்தது.

நேற்றைய போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மிக அபாரமாக விளையாடி 166 ரன்கள்அடித்திருந்தார் என்பதும் இதில் 8 சிக்ஸர்களும் 13 பவுண்டர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த போட்டியின் 44 வது ஓவரை வீசிய ரஜிதாவின் நான்காவது பந்தை கோலி சிக்ஸராக பறக்க விட்டார். ஸ்லோ பாலாக வந்த இந்த பந்த லாங் ஆன் திசையில் விரட்டிய நிலையில் 97 மீட்டர் தூரத்தில் சிக்சர் அடித்தார். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஸ்டைலில் விளாசிய கோஹ்லியின் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நேற்றைய போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றது. இதனை அடுத்து உலகிலேயே அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னாள் கடந்த 2008 ஆம் ஆண்டு அயர்லாந்த அணிக்கு எதிராக விளையாடிய நியூசிலாந்து அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அதிகப்பட்ச வெற்றியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்றுச் சாதனையை எந்த ஒரு அணியும் அவ்வளவு எளிதில் முறியடிக்க முடியாது என கிரிக்கெட் வாளினார்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version