தமிழ்நாடு
வாட்ச், குக்கர், வெள்ளி டம்ளர்… ஈரோட்டில் ஒரே பரிசு மழைதான்: செல்லூர் ராஜூ கலகல!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் பல்வேறு பரிசு பொருட்களை அளித்து வருவதாக தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.

#image_title
திமுக ஆட்சிக்கு சான்றாக இந்த தேர்தல் வெற்றி அமைய வேண்டுமென்று திமுகவினரும், எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை நிரூபிக்க அதிமுகவினரும் இந்த தேர்தலை மிக முக்கியமான தேர்தலாக கருதி தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதற்காக வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள் என விதவிதமாக கவனித்து வருவதாக குற்றச்சாட்டும் உள்ளது பரவலாக பேசவும் படுகிறது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்த போது, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் பதவி கிடைத்துள்ளது. அதிமுகவும் தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் வந்துள்ளது. இப்படி எங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைப்பது போல வாக்களர்களுக்கும் வாட்ச், குக்கர், வெள்ளி பொருட்கள் என பரிசுகள் கொட்டுகின்றன.
இரவு நேரத்தில் வந்து கதவுகளை தட்டி வாக்காளர்களுக்கு பரிசுகளை கொடுப்பதாக வாக்காளர்கள் கூறுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு ஒரே பரிசு மழைதான் என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.