தமிழ்நாடு

240 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்: இந்து முன்னணி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்கவும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்திருக்கும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் விநாயகர் சிலை வைக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புதுச்சேரியில் 240 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி இந்து முன்னணி கூறியபோது ’புதுச்சேரியில் உள்ள திடலில் 20 அடி உயரத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்று கூறியுள்ளன்ர.

மேலும் வில்லியனூர், திருக்கனூர், காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் மொத்தம் 240 சிலைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கொரோன விதி முறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் செப்டம்பர் 14-ஆம் தேதி நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விநாயகர் சிலை வைக்கவும், வழிபாடு நடத்தவும் அனுமதி அளித்த புதுவை கவர்னர் தமிழிசை அவர்களுக்கு இந்து முன்னணியினர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டில் வைத்து வழிபடும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வரை சிலைகள் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் இந்து முன்னணி மாநில தலைவர் சாய்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழாவை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்கள் வறுமையில் வாடும் நிலையில் தமிழக புதுவை முதலமைச்சர் மற்றும் கவர்னர் விநாயகர் சிலைகளை வழிபட அனுமதி அளித்துள்ளது தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பொது மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version