சினிமா செய்திகள்

விக்ரம் – கார்த்திக் சுப்புராஜ் படத்தின் அட்டகாசமான டைட்டில் மற்றும் வீடியோ!

Published

on

நடிகர் விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் ராஜஸ்தானில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இந்த படத்தின் டைட்டில் ’மகான்’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான வீடியோ ஒன்றில் விக்ரம் அட்டகாசமான கெட்டப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்தில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு கிருஷ்ணா ஒளிப்பதிவு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித்குமார் தயாரித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mahaan | Chiyaan Vikram | Dhruv Vikram | Simha | Simran | Karthik Subbaraj | Santhosh Narayanan

Trending

Exit mobile version