சினிமா செய்திகள்

சியான் விக்ரமின் ‘கோப்ரா’: மாஸ் சிங்கிள் பாடல் ரிலீஸ்

Published

on

By

பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ‘கோப்ரா’ படத்தின் சிங்கிள் பாடல் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்று அந்த பாடல் வெளியாகி உள்ளது .

இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை பா விஜய் எழுதியுள்ளார். இந்த பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
.
பொதுவாக ஏஆர் ரகுமான் பாடல் என்றால் கேட்க கேட்க தான் ஹிட்டாகும் என்று கூறுவதுண்டு. ஆனால் முதல்முறை கேட்கும்போதே இந்த பாடல் மனதை கவர்ந்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

விக்ரம் ஜோடியாக ஸ்ரீனித்ஷெட்டி நடித்திருக்கும் இந்த படத்தில் வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார்.

Cobra - Adheeraa Lyric | Chiyaan Vikram | @ARRahman  | Ajay Gnanamuthu | 7 Screen Studio

Trending

Exit mobile version