சினிமா செய்திகள்
35 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு மெளனப்படம்: விஜய்சேதுபதி நடிக்கின்றார்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’பேசும் படம்’. வசனமே இல்லாமல் இருந்த இந்த படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார் என்பது இந்த படத்தில் கமல் மற்றும் அமலா ஆகிய இருவரும் மிக சிறப்பாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு வசனமே இல்லாத மௌனப்படம் உருவாக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ‘காந்தி டாக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதிராவ் ஹைத்ரி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் .
ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார் என்பதும், பிரபல மராட்தி பட இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலகர் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் இந்து புராணத்தின் பின்னணியை கொண்டு இருந்தாலும் தற்போது உள்ள முக்கிய பிரச்சனைகளான முதலாளித்துவம், இனப்பாகுபாடு ஆகியவற்றை பேசும் படமாக இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் கேலியுடன் நகைச்சுவையுடன் கூடிய ஒரு படமாகத்தான் இருக்கும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.