சினிமா

ஒரு பக்கம் அன்னதானம்.. இன்னொரு பக்கம் அறிவு தானம்.. விஜய் அன்ன அறிவு அரசியல்!

Published

on

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்திற்கு உத்தரவி பிறப்பித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி அன்று “உலக பட்டினி தினம்” அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

#image_title

’தளபதி’ அவர்களின் சொல்லுக்கிணங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக “தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்” திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#image_title

மேலும், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக “பட்டினி தினத்தை” முன்னிட்டு ஒரு நாள் (மதிய) உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” இந்த நலப்பணி செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பக்கம் வயிற்றுப் பசியை தீர்க்க முடிவு செய்துள்ள விஜய், இன்னொரு பக்கம் அறிவு பசியை தீர்க்கவும் தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 1500 மாணவ, மாணவிகளை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் சந்திக்க போகிறார்.

அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை, அன்னதானம், அறிவார்ந்த மாணவர்களை சந்திப்பது என இந்த முறை கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் பக்கம் அடிவெடுத்து வைக்க அனைத்து திட்டங்களையும் 234 தொகுதிகளில் அஸ்திவாரம் போட்டு வருகிறார் விஜய்.

Trending

Exit mobile version