சினிமா செய்திகள்

’வாரிசு’ டிக்கெட் கிடைக்கவில்லை.. முதலமைச்சரை சந்தித்து புகார் கூறிய விஜய்ரசிகர்கள்!

Published

on

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் புதுச்சேரியில் உள்ள விஜய் ரசிகர்கள் நேரடியாக புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ’வாரிசு’ படத்திற்கு ரசிகர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் தரவில்லை என புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை போலவே புதுவையிலும் ’வாரிசு’ திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பாக முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆர்வத்துடன் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் முதல் நாள் முதல் டிக்கெட்டை உயர் அதிகாரிகள், கலெக்டர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், இந்நாள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் ஆகியோர் மொத்தமாக வாங்கிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ரசிகர்களுக்கு முதல்நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் திடீரென புதுவை மாநில சட்டமன்றம் அலுவலகத்தின் முன் விஜய் ரசிகக்ரள் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து விஜய் ரசிகர்களின் பிரதிநிதிகளை அழைத்த முதல்வர் ரங்கசாமி இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் கலெக்டரிடம் அவர் ’வாரிசு’ திரைப்படத்துக்கு ரசிகர்களுக்கும் டிக்கெட் வழங்க அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்தே ரசிகர்கள் முதலமைச்சருக்கு நன்றி கூறினர்.

இதுகுறித்து விஜய் ரசிகர் ஒருவர் தெரிவித்த போது புதுவையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ’வாரிசு’ படத்திற்கு டிக்கெட் தர திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பதாகவும் மொத்தமாக முன்னாள் எம்எல்ஏ எம்பி களுக்கு கொடுத்துவிட்டதால் நேரடியாக முதல்வரிடம் புகார் கொடுத்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Trending

Exit mobile version