சினிமா
விடுதலை படத்துக்கு ஒரு வழியா விடுதலை கொடுத்த வெற்றிமாறன்; 2 பார்ட் ஷூட்டிங்கும் ஓவராம்!

காமெடி நடிகராக சினிமாவில் சுற்றித் திரிந்த சூரியையும் ஹீரோ ஆக்குகிறேன் என இயக்குநர் வெற்றிமாறன் சொன்னதும் ஆசை ஆசையாய் விடுதலை படத்தில் நடிக்கச் சென்றார் சூரி.
அந்த படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடிக்க அழைக்கப்பட்ட விஜய்சேதுபதி படத்திற்குள் புகுந்ததும் தனியாக ஒரு பார்ட்டே எடுக்க வேண்டிய அளவுக்கு விடுதலை படம் விரிவடைந்து விட்டது.
ஒரு பாகத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாகவும், இன்னொரு பாகத்தில் சூரி ஹீரோ என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடியாமல் இழுத்துக் கொண்டே சென்ற நிலையில், நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்க முடியாமல் வணங்கான் படத்தில் சென்று தனது தலையை கொடுத்து விட்டு பல மாதங்கள் பெரிய சிக்கலில் சிக்கினார்.
ஒரு வழியாக அந்த படத்தில் இருந்து அவர் விடுதலை பெற்றுக் கொண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் பாலிவுட் பிகினி நடிகை திஷா பதானியுடன் டூயட் பாட கிளம்பி விட்டார்.
சூர்யா 42 படமும் முடிந்து விடும் விடுதலை படம் முடியுமா? என்கிற ட்ரோல்கள் குவிந்த நிலையில், தற்போது விடுதலை படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் மொத்தமும் முடிவடைந்து விட்டதாக ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் அருகே சூரி நிற்கும் கடைசி நாள் ஷூட்டிங் போட்டோ வெளியாகி உள்ளது. ஆனால், இதில் விஜய்சேதுபதி இல்லை. அவர் தனது போர்ஷனை முடித்து விட்டு ஆளும் அடையாளம் தெரியாமல் எப்பவோ ஸ்லிம்மாகி விட்டார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே விடுதலை வெளியாகி வெயிட் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய விருதை எல்லாம் ரெடி பண்ணி வச்சிடுங்க!