சினிமா செய்திகள்

டிசம்பர் 4ஆம் தேதி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. செம அப்டேட் வெளியிட்ட ‘வாரிசு’ படக்குழு

Published

on

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் பிசினஸ் அனைத்தும் முடிவடைந்து தற்போது புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது என்பதும், இந்த பாடல் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ‘வாரிசு’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமன் கம்போஸ் செய்த இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடல் முதல் பாடல் போலவே இணையதளங்களில் வைரலாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பர் 4ஆம் தேதி வெளியாகும் இந்த பாடலை விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிபிடத்தக்கது.

Trending

Exit mobile version