சினிமா செய்திகள்

விஜய்யை கொஞ்சமும் மதிக்காத தெலுங்கு இயக்குனர்: வம்சி போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?

Published

on

தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் விஜய் மீது மரியாதை கலந்த அச்சத்துடன் இருப்பார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தெலுங்கு இயக்குநர் வம்சி, விஜய் சொல்வதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் தான் சொல்வதை தான் விஜய் செய்ய வேண்டும் என கண்டிசன் போட்டு வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது .

விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து அந்த படத்தின் இயக்குனர் நெல்சன் தரப்பில் இருந்து கூறப்பட்ட தகவல் என்னவெனில் படத்தின் கதையை அவ்வப்போது விஜய் மாற்றினார் என்றும் இது ஒரு குடும்ப காமெடி பதிலாக மட்டுமே இருந்தது என்றும் ஆனால் ஆக்ஷன் கதையாக விஜய் தான் மாற்றினார் என்றும் அதனால்தான் இந்த படம் தோல்வி அடைந்ததாகவும் கூறப்பட்டது .

இந்த நிலையில் ’தளபதி 66’ படத்திலும் விஜய் சில கரெக்சன்கள் கூறியதாகவும், ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த இயக்குனர் வம்சி, ‘நான் என்ன சொல்கிறேனோ, அதை நீங்கள் நடித்தால் மட்டும் போதும் உங்கள் ரசிகர்களுக்கு என்ன தேவை என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கதை விவாதத்தில் நீங்கள் தலையிட கூடாது என்றும் கூறி விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.

விஜய்யை கொஞ்சம் கூட மதிக்காத தெலுங்கு இயக்குனரின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version