கட்டுரைகள்

விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் – தெறிக்கும் வலிமை அப்டேட்

Published

on

அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனிகபூர் தயாரித்து வருகிறது. அதாவது, நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் இதே டீம் மீண்டும் வலிமை படத்திற்காக இணைந்துள்ளது.

படம் துவங்கி ஒன்றரை வருடம் ஆகிவிட்ட நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்னும் வெளியிட வில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் ஒரு வருடத்திற்கு மேல் வலிமை அப்டேட்டை கேட்டு ஓஞ்சி போய்விட்டனர்.

இந்நிலையில், சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை மாதம் 3வது வாரத்தில் வெளியாகும் என செய்திகள் வெளியானது. தற்போது, ஃபர்ஸ்ட் லுக்கோடு சேர்த்து மோஷன் போஸ்டரும் வெளியாகவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. மேலும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என செய்திகள் கசிந்துள்ளது.

எனவே, அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #ValimaiMotionPoster என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

valimai

Trending

Exit mobile version