சினிமா

தலன்னா மாஸ்!.. டிவிட்டரில் மாஸ்டரை பின்னுக்கு தள்ளிய வலிமை….

Published

on

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாகத் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கி வரும் படம் இது. இப்படம் துவங்கியதிலிருந்தே அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #Valimai என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வந்தனர். இந்த படத்தின் அப்டேட் குறித்து நீண்ட காலமாக ரசிகர்கள் கேட்டு நச்சரித்த போதெல்லாம் இந்த ஹேஷ்டேக்கையே பயன்படுத்தி வந்தனர்.

சென்ற மாதம் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் ஒன்றுக்கு 4 போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்நிலையில்,  டிவிட்டரில் இந்திய அளவில் கடந்த ஜனவரி மதம் முதல் ஜூன் வரை அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக் என்கிற சாதனையை #Valimai ஹேஷ்டேக் படைத்துள்ளது. விஜயின் #Master ஹேஷ்டேக் 2ம் இடமும், #Ajithkumar என்கிற ஹேஷ்டேக் 4ம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த செய்தியை தல அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Trending

Exit mobile version