உலகம்

அமெரிக்காவில் 850 விமானங்கள் திடீர் முடக்கம்: அதிர்ச்சி காரணம்

Published

on

அமெரிக்காவில் திடீரென 850 விமான சேவை முடக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் விமான சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விமான சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்து விமானங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் கூறிய போது விமான சேவையில் திடீரென ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக விமான சேவை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்ம் விமானத்துறை அதிகாரிகளுக்கும் விமானிகளுக்கும் இருக்கும் அபாயம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமான சேவை குறித்த தகவல் அனுப்பும் அமைப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த கோளாறு எப்போது சரி செய்யப்படும் என்று குறிப்பிடாததால் விமான பயணிகள் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்காவுக்கு வரும் விமானங்கள் மற்றும் அமெரிக்காவிலிருந்து செல்லும் விமானங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை நிலவரத்தின் படி 760 விமானங்கள் இயக்கம் தாமதம் ஆகி உள்ளதாகவும் 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்கா முழுவதும் திடீரென சுமார் 850 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதை அடுத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் தொழில்நுட்ப கோளாறு சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் விமான சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version