உலகம்

தண்ணீருக்குள் 100 நாட்கள் வாழும் அமெரிக்க பேராசிரியர்.. உலகின் முதல் முயற்சி..!

Published

on

தண்ணீர்க்குள் நூறு நாட்கள் வாழும் முதல் முயற்சியை அமெரிக்க பேராசிரியர் ஒருவர் எடுக்க இருக்கும் நிலையில் இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீருக்குள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது கஷ்டம் என்பது தெரிந்ததே. ஆனால் நீர்மூழ்கி கப்பல் உட்பட ஒரு சிலர் தண்ணீர் ஒரு சில நாட்கள் இருப்பது உண்டு. ஆனால் நீருக்கு அடியில் 100 நாட்கள் செலவிட முடியுமா என்பதை பரிசோதனை செய்ய அமெரிக்க பேராசிரியர் ஒருவர் முயற்சி எடுத்து வருகிறார்.

மார்ச் ஒன்றாம் தேதி இந்த அசாதாரண பரிசோதனையை அவர் தொடங்கியுள்ளார் என்றும் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டிடுரி என்பவர் இந்த பரிசோதனை மேற்கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உயிரியல் ஆய்வை நடத்துவதற்காக தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம் ஆய்வு செய்ய முன் வந்ததை அடுத்து டிடுரி என்ற பேராசிரியர் இந்த ஆய்வுக்கு தன்னை தயார் செய்து கொண்டார்.

உலகில் பூமி அல்லாமல் வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்பதை பரிசோதனை செய்வதற்காகவும், நீர் சூழலில் மனிதர்கள் வாழ்ந்தால் உடல்நிலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் இந்த பரிசோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் நீரும் அடியில் வாழ்ந்தால் மனித நோய்களை தடுக்க முடியுமா என்பது குறித்த மருத்துவத்தையும் சோதிக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தண்ணீருக்குள்100 நாட்கள் வாழ முடிவு செய்துள்ள அமெரிக்க பேராசிரியரை ஒரு உளவியலாளர் மற்றும் ஒரு மனநல மருத்துவர் 24 மணி நேரமும் கண்காணிக்க உள்ளதாகவும் விண்வெளி பயணத்தை போன்ற சூழலை அவர் அனுபவிக்கும் விளைவுகளை கண்காணிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
மனிதர்களின் வாழ்க்கையை வேறு கிரகங்களுக்கு விரிவுபடுத்த இந்த சோதனை உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பணி வெற்றியடைந்தால் தண்ணீர் அடியிலும் நீண்ட காலம் மனிதனால் வாழ முடியும் என்றும் நிலத்தில் உணரப்பட்ட அழுத்தத்தை விட தண்ணீரில் இருக்கும் அழுத்தத்தில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த பயணம் எனது உடலை எல்லா வகையிலும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்யும் பயணம் என்றும் தண்ணீருக்குள் இருக்கும் அழுத்த அதிகரிப்பு காரணமாக ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் நான் அனுபவிக்க உள்ளேன் என்று இந்த பரிசோதனையில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version