உலகம்

இந்த ஓட்டலுக்கு செல்ல வேண்டாம்.. தாக்குதல் நடத்தப்படலாம்.. அமெரிக்கா எச்சரிக்கை

Published

on

By

தீவிரவாதிகள் ஸ்டார் ஹோட்டல்களில் தங்கும் பிரமுகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள் என்பதும் இந்தியாவில்கூட தாஜ் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அமெரிக்கா பாகிஸ்தானில் உள்ள மேரியட் ஓட்டலுக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் அந்த ஓட்டலில் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேரியட் ஓட்டலில் அமெரிக்காவின் தூதரக ஊழியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் அந்த ஓட்டலில் தாக்குதல் நடத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய தூதரகம் மற்றும் அதன் அரசு அரசாங்க ஊழியர்கள் வழிபாட்டுத் தலங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்த சாத்தியமான இடங்கள் என ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ள அமெரிக்க அரசு அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்லாமாபாத்தில் தற்கொலை தாக்குதல் ஒன்று நடந்ததில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார், மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விடுமுறை நாட்களில் இஸ்லாமாபாத்தில் உள்ள மேரியட் ஓட்டலில் அமெரிக்கர்கள் தங்க வேண்டாம் என்றும் மர்ம நபர்கள் சிலர் அந்த ஹோட்டலுக்கு வரும் அமெரிக்கர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டி இருப்பதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

எனவே இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் மேரியட் ஓட்டலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கும் தூதரக ஊழியர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளிக்கிழமை தலைநகரில் எந்த கூட்டம் நடந்தாலும் அந்த கூட்டங்களுக்கு செல்லக்கூடாது என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு விடுத்துள்ள எச்சரிக்கையால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version