உலகம்

திருமணம் செய்த அடுத்த நாளே போர்முனைக்கு சென்ற உக்ரைன் காதல் ஜோடி!

Published

on

திருமணம் செய்த அடுத்த நாளே உக்ரைன் வாலிபர் ஒருவர் போர் முனைக்குச் சென்று உள்ள தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ரஷ்ய படைகளை எதிர்கொள்ள முன்வரவேண்டும் என உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் போருக்கு வரும் இளைஞர்களுக்கு ஆயுதங்கள் வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 18 வயது முதல் 60 வயதான ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஷ்ய படைகளை எதிர்க்கவும் தாய் நாட்டை காக்கவும் இளைஞர்கள் பெருமளவில் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் சேர்ந்த யார் நான் யார்னா மற்றும் ஃபுர்சின் என்ற காதல் ஜோடிக்கு நேற்று முன் தினம் திருமணம் ஆன நிலையில் நேற்று அவர்கள் நாட்டுக்காக துப்பாக்கியுடன் போர்க்களத்தில் இறங்கியுள்ளனர்.

திருமணம் செய்த அடுத்த நாளே தாய்நாட்டை காக்க துப்பாக்கி ஏந்திய இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Trending

Exit mobile version