தமிழ்நாடு
நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது சிறுவன் பரிதாப பலி: திருச்சி அருகே அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி அருகே 2 வயது சிறுவன் நூடுல்ஸ் சாப்பிட்டதால் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிக்கன் சாப்பிட்ட ஒரு இளைஞரும், அதற்கு முன் சில நாட்களுக்கு முன்னர் ஷவர்மா சாப்பிட்ட ஒரு கல்லூரி மாணவி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 2 வயது சிறுவன் நூடுல்ஸ் சாப்பிட்டதால் திடீரென வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே சேகர் – மகாலட்சுமி தம்பதியின் 2 வயது மகன் சாய். இவர் உடல் அலர்ஜியால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுவனுக்கு அவரது தாய் மகாலட்சுமி நூடுல்ஸ் சமைத்துக் கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறுவன் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன்ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியதால் மகாலட்சுமி கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.