இந்தியா

மேலும் 2 வங்கிகள் விரைவில் தனியார்மயமாக்கப்படுகிறதா?

Published

on

ஏற்கனவே ஒரு சில வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தேசியமயமாக்கல் சட்டத்தின்படி மேலும் 2 வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக வங்கி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பான தகவல் பரவி வருகிறது

பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய பொதுத்துறை வங்கிகள் முதல்கட்டமாக தனியார்மயமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்த தகவலின் படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளை மட்டும் தனியார்மயமாக்க நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு வங்கி ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்தாலும் தனியார்மயமாக்குதலை மத்திய அரசு தீவிரமாக உள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version