இந்தியா

தண்டவாளத்தில் பப்ஜி விளையாட்டு – ரயில் மோதி 2 சிறுவர்கள் மரணம்

Published

on

தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் செல்போனில் கேம் விளையாடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும், சிறுவர்கள் மிகவும் அடிமையாக போகிறார்கள். இதனால் மனரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் கொரோனா லாக் டவுன் காலத்தில் பள்ளிக்கு செல்லாத பல சிறுவர்கள் செல்போன் விளையாட்டுக்கு அடிமையாகி மாறியுள்ளனர்.

அதிலும் பப்ஜி விளையாட்டுக்கு பலரும் அடிமையாகியுள்ளனர். இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். தடையும் விதிக்கப்பட்டது. ஆனால், வெவ்வேறு ரூபங்களில் இந்த விளையாட்டு உருமாறி புதிய புதிய ஆப்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், உத்திரபிரதேசம் மாவட்டத்தில் மதுரா- காஸ்கஞ்ச் இடையேயான ரயில்வே தண்ட வாளத்தில் செல்போனில் பப்ஜி கேமை விளையாடிய சிறுவர்கள் ரயில் மீதி உயிரிழந்தனர். காலை 7 மணியளவில் வீட்டில் வாக்கிங் செல்வதாக கூறிவிட்டு இந்த சிறுவர்கள் சென்றுள்ளனர். தண்டவாளத்தில் நின்று அவர்கள் பப்ஜி விளையாடியதாக அவர்களின் மொபைல் ஃபோன் செயல்பாடு மூலம் தெரியவந்துள்ளது.

Trending

Exit mobile version