உலகம்
டுவிட்டரில் ஆட்குறைப்பா? பலர் வேலையிழக்கும் அபாயம் என தகவல்!

டுவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து எலான் மஸ்க் வாங்கி உள்ள நிலையில் டுவிட்டரில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறித்து கண்காணித்து வருவதாகவும் விரைவில் சரியான ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுவதால் டுவிட்டர் ஊழியர்கள் மத்தியில் அச்சமும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்குறைப்பு இருக்குமா என்ற கேள்வியை டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வாலிடம் ஊழியர்கள் கேட்டபோது டுவிட்டர் நிறுவனம் எப்போது தனது ஊழியர்களை பற்றி அக்கறை கொண்டு இருப்பதாகவும் அதை தொடர்ந்து செய்யும் என்றும் மழுப்பலாக அவர் பதிலளித்துள்ளார் .
இதனால் டுவிட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ஊழியர்கள் தற்போது வேலை இழப்பு குறித்து அச்சத்தில் உள்ளனர்.