தமிழ்நாடு

அது என்ன தகுதியின் அடிப்படையில் 1000 ரூபாய்: டிடிவி தினகரன் விமர்சனம்!

Published

on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இன்று தாக்கல் செய்தார். இதில் எதிர்பார்த்ததை போல குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை மாதம் 1000 ரூபாய் குறித்தான அறிவிப்பை வெளியிட்டார் நிதியமைச்சர். இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

#image_title

அவரது அறிவிப்பில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக 1000 ரூபாய் மாதம்தோறும் வழங்கப்படும். புரட்சியை ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்காக 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று முதல்வர் ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கிறார். தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார் நிதியமைச்சர்.

இந்நிலையில் இந்த நிதிநிலை பட்ஜெட் அறிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக பட்ஜெட்டில் தகுதியின் அடிப்படையில் 1000 ரூபாய் தரப்படும் எனச் சொல்லியுள்ளது. அது என்ன தகுதி என்று தெரியவில்லை. ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. மக்களைச் சமாளிக்க வந்த அறிவிப்பு போலத்தான் இருக்கிறது என்று விமர்சித்தார்.

Trending

Exit mobile version