தமிழ்நாடு

இனி எல்.ஐ.சி வழியாக போக்குவரத்து இல்லை: அண்ணா சாலையில் திடீர் மாற்றம்!

Published

on

சென்னை அண்ணாசாலையில் இனிமேல் எல்ஐசி வழியாக போக்குவரத்து இல்லை என்றும் அதே போல் தேவி தியேட்டர் வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சென்னை அண்ணாசாலையில் நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் படி இரு பக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் இனி எல்ஐசி கட்டிடம் அருகே உள்ள திருவிக சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும்.

அதேபோல் ஜெமினி மேம்பாலம் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து ஓமந்தூரார் மருத்துவமனை நோக்கி செல்லும் வாகனங்கள் தேவி திரையரங்கம் வழியில் செல்லாமல் டேம்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

இந்த இரண்டு மாற்றங்களும் ஒரு சில நாட்களுக்கு சோதனை வடிவில் செய்யப்படுவதாகவும் இவை அனைத்து மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறைந்தால் இதே நிலை நீடிக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version