தமிழ்நாடு

சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: முழு விபரங்கள்

Published

on

சென்னையில் இன்று முதல் சோதனை முயற்சியாக அண்ணா சாலை உள்பட ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இதோ:

* இன்று முதல் ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையை அடையலாம் மற்றும் டவர் கிளாக் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம்

* ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் பட்டுலாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் ரோட்டிற்கு சற்று முன்பாக உள்ள ரேமன்ட்ஸ் துணி கடை எதிரே “U” டர்ன் செய்து ஸ்பென்சர் சந்திப்பு நோக்கி செல்லலாம்.

* ஓஎம்ஆர் இந்திரா நகர் சந்திப்பு வழியாக அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள், ஓ.எம்.ஆர் சர்வீஸ் சாலை வழியாக (மத்திய கைலாஷ் பின்புறம்) இடதுபுறம் திரும்பி சர்தார் பட்டேல் சாலையை அடைந்து காந்தி மண்டபம் மேம்பாலத்தின் கீழ் “U” டர்ன் திரும்பி மீண்டும் சர்தார் பட்டேல் சாலை வழியாக சி.பி.டி சந்திப்பு வழியாக செல்லலாம்.

* பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் இந்திரா நகர் சிக்னலில் வலது புறம் திரும்பி இந்திரா நகர் 2வது அவின்யூ (வாட்டர் டேங்க் சாலை) இந்திரா நகர் 1வது அவின்யூ சந்திப்பு வழியாக எல்.பி.சாலையை அடையலாம்

இந்த போக்குவரத்து மாற்றம் சோதனை முயற்சியாக 10 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்றும் அதன்பின் இந்த போக்குவரத்தை நிரந்தரமாக்குவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version