Connect with us

வணிகம்

நிர்மலா சீதாராமனின் கடைசி பட்ஜெட்.. நடுத்தர வர்க்கத்தினர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

Published

on

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. சாதாரண ஏழை எளிய மக்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இந்த அரசு தாக்கல் செய்யும் அதாவது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்ததை விட அதிக சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தொழிலதிபர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் தான் சலுகை அதிகம் அறிவிக்கப்பட்டு வருகிறது என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு பல்வேறு சலுகை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’நான் ஒரு நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவர் என்பதால் அவர்களின் அழுத்தங்களை நான் புரிந்து கொள்கிறேன், நடுத்தர வர்க்கத்தினர் என்னென்ன அழுத்தங்கள் அனுபவிக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். எனவே தற்போதைய அரசாங்கம் நடுத்தர வர்க்கத்தினர் மீதான புதிய வரிகளை எதுவும் விதிக்காது என்று அவர் உறுதி அளித்தார்.

இதன் காரணமாக நடுத்தர மக்கள் இந்த பட்ஜெட்டில் பெரும் சலுகை அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு சலுகை வழங்கும் பட்ஜெட் தான் உண்மையான பட்ஜெட்டாக இருக்கும் என பொருளாதார அறிஞர்கள் கூறிவரும் நிலையில் அதனை இந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பின்வற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்க்கும் சில அம்சங்களை இந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஏழை எளிய மக்கள் தொகை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அதேபோல் நடுத்தர வர்க்கத்தினரின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு அரசு நினைத்தால் நடுத்தர வர்க்கத்தினரை பணக்காரர்களாக மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர்களின் முக்கிய எதிர்பார்ப்பு வருமானவரி வரம்பை உயர்த்த வேண்டும் என்பதுதான். இதனால் ஏராளமான நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுவார்கள். ரூபாய் ஐந்து லட்சம் வரை வருமான வரி விலக்கு என்று அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடுத்தர வர்க்கத்திற்கு இருக்கும் இன்னொரு பெரிய பிரச்சனை வேலை வாய்ப்பு. நாட்டில் வேலை வாய்ப்பு விகிதம் அதிகரித்து வந்தாலும், வேலை வாய்ப்பு இன்னும் அதிகரித்தால் நடுத்தர வர்க்கத்தினர் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுகாதார காப்பீடு ஒவ்வொருவருக்கும் அவசியம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த சுகாதார காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு உட்பட ஒரு சில அம்சங்களை இந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் 80டி பிரிவுக்கு இருக்கும் வரம்பையும் மத்திய அரசு அதிகாரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவாக இருப்பது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான். எனவே நடுத்தர வர்க்கட்தினர் வீடு வாங்கும் அளவுக்கு அதிக தள்ளுபடியுடன் வீட்டுக் கடன், மற்றும் வீட்டு கடன் வட்டி குறைப்பு வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் கண்டிப்பாக ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பு இந்த பட்ஜெட்டில் பூர்த்தி செய்யப்பட்டால் மீண்டும் பாஜக உறுதி என்றே அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?