Connect with us

இந்தியா

அனுமதியின்றி மருந்து விற்பனை.. அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..!

Published

on

உரிமம் இல்லாமல் மருந்துகளை விற்ற அமேசான், பிளிப்கார்ட் உள்பட20 ஆன்லைன் நிறுவனங்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விதிமுறைகளை மீறி ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்த அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஹெல்த் பிளஸ் உள்ளிட்ட 20 ஆன்லைன் நிறுவனங்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளார். டிசிஜிஐ வி ஜி சோமானி பிப்ரவரி 8 தேதியிட்ட ஷோ-காஸ் நோட்டீஸில், உரிமம் இல்லாமல் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வதைத் தடை செய்யும் டிசம்பர் 12, 2018 தேதியிட்ட டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளீக்க வேண்டும் என்றும், விதிகளுக்கு முரணாக மருந்துகளை விற்பனை செய்தல், இருப்பு வைத்தல், விற்பனை செய்தல், விநியோகம் செய்தல் ஆகியவற்றுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் கேள்வி எழுப்பியுள்ளார். மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை மேற்கண்ட நிறுவனங்கள் பின்பற்றவில்லை என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு மருந்தின் விற்பனை, இருப்பு , விற்பனை, விநியோகம் ஆகியவற்றிற்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உரிமம் தேவை, உரிமத்தின் நிபந்தனைகளை உரிமம் வைத்திருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸுக்கு எந்த பதிலும் இல்லை என்றால், இந்த விஷயத்தில் நிறுவனம் எதுவும் சொல்ல முடியாது என்று கருதப்படும் என்றும், அவர்கள் மீது எந்த அறிவிப்பும் இன்றி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் கூறியுள்ளார்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?