தமிழ்நாடு

தக்காளி விலை ஒரு கிலோ ரூ.110: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

சமையலுக்கு அவசிய தேவையான தக்காளியின் விலை 110 ரூபாயை தாண்டி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி படிப்படியாக உயர்ந்து 80 ரூபாய் 90 ரூபாய் என விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதை அடுத்து தற்போது கோயம்பேடு சந்தையில் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் 14 கிலோ கொண்ட தக்காளியின் விலை 1400 ரூபாய் என்றும் ஒரு கிலோ 110 ரூபாய் என்றும் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் தற்போது தக்காளி விலையும் உயர்ந்து இருப்பது சாதாரண ஏழை மக்களை கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளது.

Trending

Exit mobile version