தமிழ்நாடு

இன்று இரவு 15 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Published

on

இன்று இரவு 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகம் மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்து வருகிறது

குறிப்பாக இரண்டு நாட்களில் இரவு நேரத்தில் மட்டும் பெய்து வந்த மழை இன்று பிற்பகல் முதலே சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள இடங்களில் மழை பெய்து வருகிறது

இதனால் கடந்த இரண்டு நாட்கள் முழுதும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த 15 மாவட்டங்கள் பின்வருமாறு: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

 

Trending

Exit mobile version