தமிழ்நாடு

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை: இன்றைய சென்னை நிலவரம்

Published

on

சென்னையில் தங்கம் விலை நேற்று கிராமத்தில் பத்து ரூபாய் உயர்ந்த நிலையில் அதே பத்து ரூபாய் என்று குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4775.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 10 ரூபாய் குறைந்து ரூபாய் 4765.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38200.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 80 குறைந்து ரூபாய் 38120.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5164.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41312.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 10ம், ஒரு சவரன் ரூபாய் 80ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலையின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லை. நேற்று வெள்ளியின் விலை ரூ. 66.30 என விற்பனையான நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 66300.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version