உலகம்

பெண்கள் பள்ளிகளை மூடுவதற்காக மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்..!

Published

on

பெண்கள் பள்ளிகளுக்கு செல்வதை தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி ஈராநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் நாட்டில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவிகள் சிலர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்கள் பள்ளி செல்வதை தடுப்பதற்காகவும் மாணவிகளின் பள்ளிகளை மூடுவதற்காகவும் மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்படுவதாகவும் இதுவரை நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈராம் நாட்டில் உள்ள கோம் என்ற நகரில் தான் நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளை மூடும் நோக்கத்தில் இந்த விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறியுள்ளது. மாணவிகள் படிப்பை தொடரக்கூடாது என்பதற்காக விஷம் கொடுக்கிறார்கள் என்று கூறப்பட்ட நிலையில் இதனை அதிகாரிகள் மறுத்துள்ளனர். மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட ரசாயன கலவைகள் விஷம் அல்ல என்றும் தீவிர சிகிச்சை தேவைப்படாத அளவில்தான் இந்த ரசாயன கலவை இருந்தது என்றும் இது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் ஈரான் அரசின் கல்வி அமைச்சர் யூசுப் தெரிவித்துள்ளார்.

மேலும் விஷம் கொடுத்ததாக அனுமதிக்கப்பட்ட மாணவிகளுக்கு அடிப்படை நோய்கள் இருந்ததாகவும் மாணவிகளுக்கு விஷம் கொடுத்ததாக வதந்திகள்தான் பரப்பப்பட்டு வருகிறது என்றும் இருப்பினும் இது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் 50 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும் இந்த விஷம் கொடுத்தது யார் என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மாணவிகளின் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஹிஜாப் அணியாத பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்ததில் இருந்து மாணவிகள் மற்றும் பெண்கள் மீது கடும் நடவடிக்கைகளை ஈரான் அரசு எடுத்து வருகிறது. இதனை அடுத்து ஹிஜாப் அணிய மாட்டோம் என்று பல மாணவிகள் போராடி வருகின்றனர் என்பதும் இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஈரான் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version