தமிழ்நாடு
ஆன்சர் கீ எப்போது? டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2eஎ தேர்வு கடந்த சனிக்கிழமை நடந்த நிலையில் இந்த தேர்வின் ஆன்சர் கீ எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 ஏ மற்றும் 2 தேர்வில் ஒரு சில கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதற்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் சில கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக தகவல் பரவி வருவது வழக்கமான சர்ச்சை தான் என்றும் ஆனால் எந்த கேள்வியும் தவறானது அல்ல என்றும், மொழிபெயர்ப்புகளிலும் எந்த தவறும் இல்லை என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது
மேலும் தேர்வுக்கான ஆன்சர் கீ எப்போது வெளியிடப்படும் என்ற தகவலில் ஆன்சர் கீ இன்னும் நான்கு நாட்களுக்குள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது
மேலும் நடைபெற்று முடிந்த தேர்வில் தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்யலாம் என்றும் அதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவகாசம் முடிந்த பின்னர் வல்லுநர்கள் குழு தேர்வுக்கான விடைகளை இறுதி செய்யும் எனவும் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் கூறியுள்ளது.