தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ‘வாகன பெர்மிட்’ கட்டணம் உயர்வு.. சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு?

தமிழ்நாடு அரசு வணிக பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் வாகன பெர்மிட் கட்டணத்தை 177 சதவிகிதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது.
பேருந்துகளுக்கான ஸ்டேஜ் பெர்மிட் கட்டணம் 1500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சரக்கு வாகனங்களுக்கான கூட்ஸ் கேரேஜ் பெர்மிட் கட்டணம் 1200 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஆட்டோ ரிக்ஷா உள்ளிட்ட காண்ட்ராக்ட் கேரேஜ் பெர்மிட் கட்டணம் 300 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கேப் உள்ளிட்ட காண்ட்ராக்ட் கேரேஜ் மோடார் பெர்மிட் கட்டணம் 525 ரூபாயிலிருந்து 1100 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேக்ஸி கேப் காண்ட்ராக்ட் கேரேஜ் பெர்மிட் கட்டணம் 750 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கான பெர்மிட் கட்டணம் 1,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு வாகன பெர்மிட் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.
2021-2022 நிதியாண்டில் க்ரீன் டாக்ஸ், வாகன பதிவு, மோட்டார் வாகன வரி மற்றும் பிற கட்டணங்கள் மூலம் 5,271.9 கோடி ரூபாய் வசூல் தமிழக அரசுக்கு கிடைத்து இருந்தது.
இப்போது பெர்மிட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால், நடப்பு நிதியாண்டில் மேலும் தமிழக அரசின் வருவாய் அதிகரிக்கும்.
அதே நேரம் இந்த கட்டணங்கள் உயர்வால் ஆட்டோ கட்டணம், பேருந்து கட்டணங்கள் போன்றவை விரைவில் அதிகரித்து சாமானிய மக்களைப் பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.