சினிமா செய்திகள்

’என்னடி முனியம்மா கண்ணுல மையி’ பாடகர் காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

Published

on

ஐநூறு திரைப்படங்களுக்கு மேல் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்தவரும் பாடகருமான டிகேஎஸ் நடராஜன் அவர்கள் காலமானார். அவருக்கு வயது 87.

கடந்த 1954 ஆம் ஆண்டு திரையுலகில் நடிகராக அறிமுகமான டிகேஎஸ் நடராஜன், டிகேஎஸ் சகோதரர்கள் நாடக கம்பெனியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரைப் படங்களில் நடிப்பதோடு பாடல்களும் பாடியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ’வாங்க மாப்பிள்ளை வாங்க’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’ என்ற பாடலை பாடியதன் மூலம் மிகப் பெரிய புகழை பெற்றார்.

நடிகர் டிகேஎஸ் நடராஜன் வயது மூப்பு காரணமாக சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள டிகேஎஸ் நடராஜன் இல்லத்தில் திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version