தமிழ்நாடு

மின் – ஆதார் எண்கள் இணைப்பு: காலக்கெடு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டது என்றும் தெரிந்ததே. இந்த நிலையில் மின் ஆதார் எண்களை இணைக்க இன்றுடன் கால அவகாசம் நிறைவடைந்ததை அடுத்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தற்போது புதிய தகவல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மின்எண் மற்றும் ஆதார் எண்ணை டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் இதற்காக அனைத்து மின் நிலையங்களிலும் சிறப்பு கவுன்டர்கள் வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மின் – ஆதார் எண்ணை இணைக்க காலநீட்டிப்பு வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து தற்போது ஒரு மாத காலம் கூடுதலாக கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஜனவரி 31ஆம் தேதி வரை மின் – ஆதார் எண்களை இணைத்து கொள்ளலாம் என்றும் இதற்கான கூடுதல் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் ஆன்லைன் மூலம் மின் எண்ணுடன் ஆதார் எண்ணுடன் இணைக்க முடியாமல் சிரமப்படுவதை அடுத்து மின் – ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரியையும் வெளியிட்டது என்றும் இதன் மூலமும் பொதுமக்கள் மின் – ஆதார் எண்களை இணைத்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் டிசம்பர் 29 ஆம் தேதி வரை தமிழகத்தில் மின் ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியில் சிறப்பு முகாம்கள் மூலம் 2.27 லட்சமும் ஆன்லைன் மூலம் 1.98 லட்சம் எண்கள் இணைக்கப்பட்டதாகவும் இதுவரை ஒரு கோடியே 56 லட்சம் மின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version