சினிமா செய்திகள்
துணிவு ஹீரோயின் மஞ்சு வாரியருக்கு இவ்வளவு பெரிய பொண்ணா? ரசிகர்கள் ஷாக்!

நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள மஞ்சு வாரியருக்கு 23 வயதில் மகள் இருக்கும் விஷயம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் என பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை மஞ்சு வாரியர். 17 வயதில் சாக்ஷியம் எனும் மலையாள படத்தில் நடிக்க ஆரம்பித்த மஞ்சு வாரியர் கேரள சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம், திலீப் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டார் .
1998ஆம் ஆண்டு நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்ட மஞ்சு வாரியர் 2015ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பின்னர் நடிகை காவியா மாதவனை நடிகர் திலீப் திருமணம் செய்து கொண்டார்.
மஞ்சு வாரியர் இரண்டாவதாக யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். நடிகர் திலீப்புக்கும் மஞ்சு வாரியருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மஞ்சு வாரியர் திலீப்பை பிரிந்த நிலையில், மகள் மீனாக்ஷி அம்மாவுடன் வராமல் அப்பாவுடனே வாழ்ந்து வருகிறார்.
அசுரன், துணிவு என தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் மஞ்சு வாரியரின் மகள் 23 வயதை கடந்த நிலையில், அவரது புகைப்படங்கள் திடீரென சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
மீனாக்ஷி திலீப்பை பார்த்த ரசிகர்கள் அப்படியே அம்மா மஞ்சு வாரியர் போலவே இருக்கிறாரே என வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். கல்லூரி படிப்பை படித்துக் கொண்டே மீனாக்ஷியும் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் மலையாளத்தில் நடிகையாக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.