சினிமா செய்திகள்

இவன் வெறித்தனமான அசுரன்!

Published

on

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அசுரன் திரைப்படத்தின் அடுத்த இரண்டு லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.

அந்த இரண்டு போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றன.

ஒரு போஸ்டரில், இளமையான விண்டேஜ் லுக் தனுஷ் சாந்தமாக பழங்கால நடிகர்களை போல மீசை வைத்த லுக்கில் கவர்கிறார்.

இன்னொரு போஸ்டரில், வேற லெவல் வெறித்தனத்துடன் ஒரு நிஜ அசுரனாகவே மாறியுள்ளார் நடிகர் தனுஷ்.

வடசென்னை படத்திற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால், அசுரன் படத்திற்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என போஸ்டர்களை பார்த்தே பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விரைவில், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என அந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இயக்குநர் பாலாஜி சக்திவேல் வில்லனாக மிரட்டியுள்ளார்.

அக்டோபர் 2ம் தேதி அசுரன் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version