உலகம்

இன்றைய வேலை நீக்க செய்தி.. 17% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ஸ்டார்ட் அப் நிறுவனம்..!

Published

on

இன்றைய ராசிபலன் செய்தி போல் இன்றைய வேலை நீக்க செய்தி வெளியிடும் அளவிற்கு தினந்தோறும் எதாவது ஒரு நிறுவனம் அல்லது பல நிறுவனங்கள் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களே பொருளாதார மந்தநிலையை தாக்குபிடிக்க முடியாமல் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வரும் நிலையில் சின்ன சின்ன ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நிலை குறித்து சொல்லவே தேவை இல்லை.

அந்த வகையில் ஹெல்த் கேர் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களில் 17 சதவீதம் ஊழியர்களை நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹெல்த் கேர் ஸ்டார்ட் அப் நிறுவனமான நோமட் ஹெல்த் என்ற நிறுவனம் கடுமையான பொருளாதார நிலைமையை சமாளிப்பதற்காக 17 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

#image_title

இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிய அலெக்ஸி என்பவர் இது குறித்து கூறிய போது எங்கள் நிறுவனத்தின் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 691 என இருந்த நிலையில் தற்போது 572 ஆக குறைக்க குறைத்துள்ளோம் இது 17% வேலைநீக்க நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.

மற்ற பெரிய நிறுவனங்களைப் போலவே எங்கள் நிறுவனமும் பணவீக்கம், தேவை குறைதல், ,ச்ந்த நிலை ஆகியவை காரணமாக வேலை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது என்றும் பொருளாதாரத்தில் ஒரு பெரிய மாற்றத்தை எங்கள் நிறுவனம் எதிர்கொள்வதால் ஊழியர்களின் வேலைநீக்கம் தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மூலப் பொருள்களின் விலை உயர்வு, தொற்றுநோயால் ஏற்பட்ட பண வீக்கம், மற்றும் பொருளாதார மந்த நிலை, எரிபொருள் விலை உயர்வு ஆகியவை காரணமாக செலவுகள் அதிகமாகி விட்டதால் செலவை குறைப்பதற்காக ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 6 வார கால அடிப்படை ஊதியம் மற்றும் ஒரு மாத சுகாதார காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்த ச்வர் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும் சில சலுகைகளை நிறுத்தப் ஆலோசனை செய்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவை தவிர்க்க நாங்கள் கடுமையாக முயற்சி செய்தோம் என்றும் ஆனால் செலவை குறைக்க வேறு வழியே இல்லாததால் தான் 17% ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளோம் என்றும் எங்களை சுற்றி ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு நாங்கள் மாறி ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று யாஹூ நிறுவனம் 20% ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் இன்று நோமெட் ஹெல்த்கேர் நிறுவனமும் வேலைநீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இன்னும் எந்தெந்த நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version