தமிழ்நாடு
நடப்பு கல்வியாண்டிலும் பாடத்திட்டம் குறைப்பா? பள்ளிக்கல்வித்துறை தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக பாடத்திட்டம் குறைக்கப்பட்ட நிலையில் நடப்பு கல்வி ஆண்டிலும் பாடத்திட்டம் குறைப்பு உண்டா என்ற கேள்விக்கே பள்ளிக்கல்வித்துறை பதிலளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டன என்பதும் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டன என்பதும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த மட்டுமே நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மாணவர்களுக்கு பாடச் சுமையை குறைக்கும் வகையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை பாதியாக குறைத்திருந்தது.
இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் அதேபோல் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா? என பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்த்திருந்த நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு வருவதற்கு கொரோனா பாதிப்புக்கு முந்தைய பாடத்திட்டமே தொடரும் என்று அறிவித்துள்ளது. அதாவது முழு பாடத்திட்டமும் உண்டு என்றும் பாடத்திட்ட குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இது குறித்து கருத்து கூறுமாறு மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.