உலகம்

இவர் வேலையில் சேர்ந்த 3 வங்கியும் திவால்.. கடைசியாக சிலிக்கன் வேலி வங்கி..!

Published

on

சமீபத்தில் அமெரிக்காவில் இரண்டு முக்கிய வங்கிகள் திவால் ஆனது என்றும் சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் திவால் ஆனது. இதனால் அமெரிக்க பங்கு சந்தையை மட்டும் இன்றி இந்திய பங்கு சந்தை உள்பட உலக பங்கு சந்தைகள் ஆட்டம் காண வைத்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அமெரிக்காவில் திவாலான வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கியில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஏற்கனவே திவால் ஆன இரண்டு வங்கிகளில் பணிபுரிந்துள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிலிக்கான் வேலி வங்கியில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தவர் ஜோசப் ஜென்டைல் என்பதும் இவர் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு வங்கி திவால் ஆன லெஹ்மன் பிரதர்ஸ் என்ற வங்கியில் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது.

25 ஆயிரம் பணியாளர்களுடன் அமெரிக்காவில் நான்காவது பெரிய முதலீடு வங்கி ஆக இருந்தால் லெஹ்மன் பிரதர்ஸ் திடீரென திவால் ஆனதால் அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் கண்டது. 2008 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் தோல்வி அடைந்த இரண்டாவது பெரிய வங்கி சிலிக்கான் வேலி ஏங்கி என்பதும் இந்த வங்கியிலும் ஜோசப் ஜென்டைல் தான் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்த இரண்டு வங்கிகளுக்கு முன்னர் அவர் ஏற்கனவே ஒரு வங்கியில் பணிபுரிந்ததாகவும் அந்த வங்கியின் திவால் ஆனதாகவும் கூறப்படுகிறது. ஜோசப் ஜென்டைல் தனது வாழ்க்கையில் பணிபுரிந்த மூன்று வங்கிகளுமே திவால் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#image_title

செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதித்துறையில் எம்பிஏ படித்த ஜோசப் ஜென்டைல் பல அதிரடி முடிவுகளை எடுத்து தான் வேலை பார்த்த நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க கடும் போராட்டம் நடத்தி உள்ளார். ஆனால் அவருடைய முயற்சி எதுவுமே பலிக்காமல் அவர் பணி செய்த மூன்று வங்கிகளுமே திவால் ஆகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது இரண்டு வங்கிகள் திவால் ஆனதை அடுத்து சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு வங்கியும் திவாலாகும் நிலையில் உள்ளதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. உலக அளவில் வங்கிகள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில் தற்போது வங்கிகள் திவால் ஆகி வருவது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி வருங்காலத்தில் வங்கிகளை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள் என்ற நிலைமை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version