இந்தியா
எடியூரப்பா முடிவுக்கு எதிராக கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்.. தமிழக எல்லைகளில் பேருந்து சேவைகள் நிறுத்தம்!

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைப்பதாக அறிவித்ததை எதிர்ப்பு, கன்னட அமைப்புகள் மாநிலம் முழுவதும் முழு அடைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகா, மகாராஷ்டிரா இடையில் எல்லை பிரச்சனை உள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள மராட்டியர்களுக்கு வாரியமும், 50 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்குவதாக முதல்வர் எடியூரப்பா அண்மையில் அறிவித்து இருந்தார்.
முதல்வரின் இந்த முடிவைத் திரும்பப் பெறக்கோரி கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள், நிறுவனங்கள் அனைத்து ஒத்துழைப்பு அளித்துள்ளன.
எனவே தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
பொது போக்குவரத்து சேவைகளான பேர்ந்து, மெட்ரோ போன்றவற்றைக் காவலர்கள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. ஓட்டல் உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தாலும், அவர்கள் மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் கர்நாடகாவில் உள்ள மால்கள், வணிக நிறுவனங்கள் இன்று மூடப்பட வேண்டும் என்று வாட்டல் நாகராஜ் கூறியதின் பெயரில் அவை மூடப்பட்டு உள்ளன.
கர்நாடகாவில் மராட்டியர்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அப்படி இருக்கும் மராட்டியர்களுக்கான வாரியமாகதான் இது இருக்கும். மராட்டி பேசுபவர்களுக்கான வாரியம் இது இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் அசுவத்த நாராயணன் தெரிவித்துள்ளார்.
மராட்டியர்களுக்கு வாரியம் அமைத்தால், கர்நாடகாவில் உள்ள தமிழர்கள், தெலுங்கர்களுக்கும் வாரியம் அமைக்கப்படுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த துணை முதல்வர், 10 வருடங்களுக்கும் அதிகமாக இந்த மாநிலத்தில் உள்ளவர்கள் கான்னடிகர்கள் தான். அவர்களை இரண்டாம் நிலை குடிமக்களாகச் சித்தரிக்க முடியாது. அவர்களுக்கும் வாரியம் அமைப்பதில் தவறு ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.
வேலை நிறுத்த போராட்டம் வேண்டும் என்று அறிவுறுத்திய முதல்வர் எடியூரப்பா, கர்நாடகாவில் அனைத்து வளர்ச்சிக்கும் உறுதி அளிக்கிறேன். இந்த வேலை நிறுத்தம் பொதுமக்களுக்குத் தான் சிரமத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
வணிக நிறுவனங்களை வலுக்கட்டாயமாக மூட முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் போராட்டம் நடத்த பல்வேறு வழிகள் உள்ளன என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்த போராட்டத்தின் போது வன்முறை வெடிக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
















