தமிழ்நாடு

ஈபிஎஸ் தரப்பை மிரள வைத்த ஓபிஎஸ் தரப்பின் டுவிஸ்ட் வாதம்!

Published

on

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில், தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது என்று கூறி வழக்கை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

#image_title

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஓபிஎஸ் தரப்பு முதலில் தங்களது தரப்பு வாதங்களை முன் வைத்தது. இதில் பல்வேறு வாதங்களை முன்வைத்தது ஓபிஎஸ் தரப்பு. ஆனால் ஈபிஎஸ் தரப்பு சற்றும் எதிர்பார்க்காத சில வாதங்களை முன்வைத்ததாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இந்த வாதங்கள் கூட தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக அமைய வழிவகுக்கலாம் என கூறப்படுகிறது.

ஓபிஎஸ் தரப்பின் முக்கிய வாதங்கள் பின்வருமாறு:

* விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு ஒருங்கிணைப்பாளர் பதவிகளைக் கலைத்து இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். பெரும்பான்மை உள்ளது என்ற முடிவின் காரணமாக இம்மாதிரியான முடிவுகளை எடுத்துள்ளனர்.

* இது எம்ஜிஆரின் நோக்கத்திற்கும், கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கும் விரோதமானது.

* ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளைத்தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.

* தகுதிநீக்கம் செய்துவிட்டு பதவிகள் காலாவதியாக ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்கமுடியும். ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிடவில்லை.

* பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கி, கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் வழக்கை திரும்பப்பெறத் தயார். தொண்டர்கள் முடிவெடுக்கட்டும்.

இந்த வாதம் தான் ஈபிஎஸ் தரப்பு எதிர்பார்க்காத வாதமாக கூறப்படுகிறது. இரு தலைவர்களும் மாறி மாறி தலைமை பொறுப்புக்கு மோதிக்கொள்ளும் இந்த சூழலில் இதனை தொண்டர்கள் மத்தியில் விட்டுவிட்டு நீதிமன்றமே தலையிட்டு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தினால் என்ன? என்ற நிலைக்கு இந்த வாதம் கொண்டு செல்லலாம் என கூறப்படுகிறது. ஆனால் நீதிபதி அப்படி சொல்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version