சினிமா
நிலநடுக்கத்தால் பாதியில் நின்ற ‘லியோ’ படப்பிடிப்பு!

காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ‘லியோ’ படப்பிடிப்பு பாதியில் நின்றுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, கெளதம் மேனன் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘லியோ’. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக காஷ்மீரில் நடந்து வருகிறது. கெளதம் மேனன், மிஷ்கின் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரது போர்ஷன்கள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் விரைவில் சென்னை ஷெட்யூல் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் ’லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் முடிய இருக்கிறது.

leo
இந்த நிலையில், திடீரென்று எதிர்பாராத விதமாக காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. நேற்று மிதமாக காஷ்மீர் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தை ‘லியோ’ படக்குழுவும் உணர்ந்து படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தி இருக்கிறார்கள். படக்குழுவில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை தயாரிப்புத் தரப்பு உறுதிப்படுத்தி இருக்கிறது.
கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாகி வரும் இதன் மொத்தப் படப்பிடிப்பும் மே மாதத்திற்குள் முடிவடைய படக்குழு திட்டமிட்டுள்ளது. 15 வருடங்கள் கழித்து த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்க படத்தில் அர்ஜூன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டப் பலரும் நடித்து வருகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.