இந்தியா
இந்திய நடிகரை நிலவுக்கு அழைத்து செல்லும் எலான் மஸ்க்: குவியும் வாழ்த்துக்கள்!
Published
2 months agoon
By
Shiva
ஜப்பானிய பில்லியன் ஒருவர் அடுத்த ஆண்டு நிலவுக்கு செல்லும் குழுவை சேர்ந்த எடுத்துள்ள நிலையில் அதில் இந்திய நடிகர் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் ஜப்பானிய தொழிலதிபர் யுசாகு மேசாவா என்பவர் தலைமையிலான ஒரு குழு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிலவைச் சுற்றி பயணம் செய்யவுள்ளது.
இந்த பயணத்தில் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக்கலைஞர்கள் உள்பட பலர் அடங்கியுள்ள குழு உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய நடிகர் ஒருவரும் இடம் பெற்று உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலவு பயணத்தின் குழுவில் இந்தியாவின் சார்பில் நடிகர் தேவ் ஜோஷி என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் 3 வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் என்பதும், தற்போது விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார் என்பதும் இசை வீடியோக்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘இது மாதிரி ஒரு அற்புதம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்றும் இது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்றும் இந்த மைல்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் சார்பில் நான் இருப்பதை பெருமை படுகிறேன் என்றும் இந்தியாவுக்கு உண்மையிலேயே இது ஒரு பெருமை என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு இந்த நிலவு பயணம் தொடங்க இருப்பதாகவும் அதில் மொத்தம் எட்டுபேர் பயணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த நிலவு பயணம் வெற்றிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
月旅行のクルーが決まりました!
Crew for Moon Trip Selected!!#dearMoonCrew @dearmoonproject https://t.co/Fle1vbPplD— 前澤友作@MZDAO (@yousuck2020) December 8, 2022
You may like
-
2 ஆண்டுகளுக்கு பின் மீண்டு வந்தது கங்கனாவின் ட்விட்டர் … முதல் ட்விட்டே என்ன தெரியுமா?
-
மீண்டும் டுவிட்டரில் வேலைநீக்க நடவடிக்கை.. கொடுத்த வாக்கை காப்பாற்றாத எலான் மஸ்க்!
-
நீதிமன்றம் செல்கிறார்களா வேலைநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் ஊழியர்கள்.. சிக்கலில் எலான் மஸ்க்
-
இனி டீசர், டிரைலர்களை டுவிட்டரில் பதிவு செய்ய முடியாதா? எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு!
-
முதன்முதலில் டேட்டிங் சென்ற பெண்ணிடம் இதையா கேட்பார்கள்? எலான் மஸ்க்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
-
750 பில்லியன் சொத்துக்களை இழந்த முதல் தொழிலதிபர்.. எலான் மஸ்க்கிற்கு இப்படியும் ஒரு சாதனையா?