சினிமா செய்திகள்
புல்வாமா தாக்குதல் எதிரொலி; பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், இன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒரு மேஜர் உள்பட 4 இந்திய வீரர்கள் பலியாகி உள்ளனர்.
இதனால், பாகிஸ்தான் நடிகர்கள் இனி இந்திய படங்களில் நடிக்க அனுமதிக்க கூடாது என அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இதனை மீறும் படக்குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த பல நடிகர்கள் மற்றும் நடிகைகள், பாலிவுட்டின் பல படங்களில் நடித்து வரும் நிலையில், டோட்டல் தமால் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் கேள்விக் குறியாகி உள்ளது.






















