இந்தியா

நன்றி நண்பா! காங்கிரஸ் முதல்வருக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

Published

on

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல் அமைச்சராக அசோக் கெலாட் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில அரசியலில் இப்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு முக்கியத் தலைவரான சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

வந்தே பாரத் ரயில்

ராஜஸ்தானில் நிலவும் இந்த பரபரப்பான சூழலில், அம்மாநிலத்தின் அஜ்மீரில் இருந்து தலைநகர் டெல்லி வரையிலான வந்தே பாரத் ரயில் திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சியின் வழியாக பங்கேற்று வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஜெய்ப்பூரில் நடந்த இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.

நன்றி நண்பரே!

வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய சவாலான அரசியல் சூழலில், பல பிரச்சனைகளை கெலாட் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், வளர்ச்சி மற்றும் ரயில்வே தொடர்பான திட்டங்களில் கெலாட் பங்கேற்று விழாவை சிறப்பித்து உள்ளார். கெலாட் அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை, எங்களது நட்பிற்கு வலிமையைச் சேர்க்கிறது. நமது நட்பில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி பேசினார்.

Trending

Exit mobile version